ஸ்ரீபுரம் பற்றி

 

திருப்பூர் மாநகரம் மற்றும் பின்னலாடை தொழில்துறை மீது பற்று கொண்ட, நல்லுள்ளம் படைத்த தொழிலதிபர்களால் துவங்கப்பட்டது ஸ்ரீபுரம் அறக்கட்டளை. செல்வத் திருநகரான திருப்பூரின் இன்னொரு பெயரான ‘ஸ்ரீபுரம்’ என்ற பெயரில் நமது அறக்கட்டளை இயங்குகிறது.

திருப்பூரின் உள்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துதல், நகரை தூய்மைப்படுதுதல், குளங்களை தூர் வாருதல், திருப்பூரில் தொழிலாளர் பற்றாக்குறையைப் போக்குதல், தொழிலாளர்களைப் திறன் மேம்பாட்டு பயிற்சி மூலம் பயிற்றுவித்து திறனுள்ளவர்களாக மாற்றி வேலைவாய்ப்பு அளித்தல், குற்றங்களைத் தடுக்கவும் பாதுகாப்பு கருதியும் பொது இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துதல் ஆகிய பணிகளின் மூலமாக, திருப்பூரின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவே “ஸ்ரீபுரம் அறக்கட்டளை” துவங்கப்பட்டுள்ளது.

தொலைநோக்கு திட்டம்

 

2020 ல் ஒட்டுமொத்த திருப்பூரின் வர்த்தக மதிப்பு ரூபாய் ஒரு இலட்சம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்நயிக்கப்பட்டுள்ளது.

அதற்காக வரைவு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒப்புதலுடன் செயல்படுத்த திட்டமிடபட்டுள்ளது. இந்த இலக்கிற்காக திறன் மிகு தொழிலாளர்களை உருவாக்கி, குறை மற்றும் பாதிப்பு (Zero Defect, Zero Effect) இல்லாத ஆடைகளை உற்பத்தி செய்ய அனைத்துவித முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது. நமது தொழிலாளர் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பிற்காக, திருப்பூர் நகரம் முழுவதுமாக கண்காணிப்பு கேமரா பொறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நகரின் தூய்மை கருதி சோதனை முயற்சியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டமும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அறக்கட்டளை இயக்குனர்கள்

Mr.A.M.SHANMUGAM

Adviser