நமது திருப்பூரில் பனியன் உற்பத்தி நிறுவனங்களில் சுமார் 60விழுக்காடு பெண்கள் பணிபுரிகின்றனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஸ்ரீபுரம் அறக்கட்டளையில், கணக்கு தணிக்கையாளர்கள் (Auditors), வழக்கறிஞர்கள்(Lawyers), தன்னார்வலர்கள் மற்றும் மகளிர் அமைப்புகளில் இருந்து 15 பேர் கொண்ட “சமுதாய மேம்பாட்டுக் குழு” செயல்பட்டு வருகிறது.
ஸ்ரீபுரம் அறக்கட்டளையின் NGO மூலம் தொழில் நிறுவனங்களில் 6 முதல் 8 பேர் கொண்ட பாலியல் விழிப்புணர்வு குழு ஒன்று நிறுவி, அதில் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் எய்ட்ஸ் (HIV) தொடர்பான பயிற்சி அளிக்கப்படுகின்றன. பெண்கள் பணிபுரியும் நிறுவனங்களில் பாதுகாப்புடன் இருக்கிறர்களா..? பணியின்போது பாலியல் துன்புறுத்தல் ஏதேனும் உள்ளதா..? என்று ஆய்வுகள் செய்து, ஏதேனும் இடர்பாடுகள் இருப்பின் பாலியல் விழிப்புணர்வு கூட்டத்தில் ஆலோசனைகள் நடத்தப்பட்டு, அதற்க்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஸ்ரீபுரம் அறக்கட்டளை NGO மூலம் “பாலியல் விழிப்புணர்வு” கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு, பாலியல் மற்றும் எய்ட்ஸ்(HIV) தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கப்படுகிறது.
வெளிநாட்டு (buyer Audit) வாடிக்கையாளர்களின் தர நிர்ணய தணிக்கை சான்றிதழுக்கு (Certification of Audit) பாலியல் விழிப்புணர்வு குழுக்கூட்டம் (Sexuall Harassment Committe Meeting) நடத்தியதற்கான NGO சான்றிதழ் அவசியம். மேலும் (ROCL – Robate on state Levis on Export of Garments) வரி விதிப்புகளின் மீது தள்ளுபடி (சலுகை-Refund) பெறுவதற்கும் NGO சான்று அவசியம்.
திருப்பூரில் இப்பொழுது அணைத்து ஏற்றுமதி நிறுவனங்களிலும், ஸ்ரீபுரம் அரக்கட்டளையின்மூலம் “பாலியல் விழிப்புணர்வு குழு” கூட்டம் நடத்திவருகின்றோம். ஏற்றுமதி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்கு – Labour Committe Meeting –ல் NGO Participation தேவை எனில் தொடர்புகொள்ள வேண்டுகிறோம்.
ஸ்ரீபுரம் அறக்கட்டளை,
வாய்க்கால் தோட்டம், ஷெரிப் காலனி,
காமாட்சியம்மன் கோவில் அருகில்,
திருப்பூர் – 641 604
Ph : 0421-4322272, 4322292
Mob No : 82200 32005, 77085 55005
Email : ngo@sripuram.co.in
Web : www.sripuram.co.in